கல்விக்கடன் வழங்குவதற்கு ஆதார் எண்ணை பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். தில்லியில் நடைபெற்று வரும் பொருளாதார மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், ஆன்லைன் வர்த்தகம் உலக சந்தையை உள்ளூர் சந்தையுடன் இணைப்பதாகக் கூறியுள்ளார்.
ஆன்லைன் வர்த்தகம் உள்ளூர் பொருள்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்துவதை எளிதாக்குவதாகவும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். வங்கிகளின் தானியங்கி வசதிகளை பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
கல்விக்கடன் உள்ளிட்ட வசதிகளுக்கு ஆதார் எண்ணை பயன்படுத்துவது பற்றியும் ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாகவும் ரகுராம் ராஜன் கூறினார்.
No comments:
Post a Comment