தொடர் மழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு வந்தன. வேலூர் மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டன. தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ளதையடுத்து வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சென்னை , காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு வரும் 22-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 23-ம் தேதி வழக்கம் போல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment