Pages

Wednesday, November 4, 2015

ஆதிதிராவிட மாணவர் கல்விக் கட்டண அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு:


ஆதிதிராவிட நலத்துறைக்கு நோட்டீஸ்
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் கல்விக் கட்டணம் தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்க ஆதிதிராவிட நலத்துறைச் செயலருக்கு நோட் டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மேலாண்மை அறங் காவலர் சக்திவேல், உயர் நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:கல்லூரியில் படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்களிடம் இருந்து நேரடியாக கல்விக் கட்டணம் வசூல் செய்யக்கூடாது.

அவர் களுக்குரிய கல்விக் கட்டணம் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் கல்லூரிக்கு நேரடியாக வழங்கப் படும் என 11.9.2012-ல் கல்லூரிக் கல்வி இயக்குநர் அரசாணை பிறப்பித்தார்.அந்த அரசாணையில் இளங் கலை வரலாறு படிப்புக்கு ரூ.1,350, இளங்கலை அறிவியல் படிப்புக்கு ரூ.2,350, முதுநிலை படிப்பு களுக்கு ரூ.4,750 என கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கட்டணம் பற்றி கல்லூரி நிர் வாகத்துடன் ஆலோசிக்காமல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை அமலுக்கு வந்ததில் இருந்து எஸ்சி, எஸ்டி மாணவர் களிடம் கல்விக் கட்டணம் வசூல் செய்யவில்லை ஆனால், அந்த மாணவர்களுக்குரிய கல்விக் கட்டணத்தை அரசு முறையாக கல்லூரிக்குச் செலுத்தவில்லை.

எனவே, கல்விக் கட்டணத்தை மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தவும், பின்னர் அந்தப் பணத்தை மாணவர்களிடம் இருந்து கல்லூரி நிர்வாகம் வசூ லிக்கவும் அனுமதிக்க வேண் டும். எஸ்சி. எஸ்டி மாணவர் களின் கல்விக் கட்டண அரசா ணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதி டி.ஹரி பரந்தாமன் முன் நேற்று விசார ணைக்கு வந்தது. மனுவுக்கு ஆதிதிராவிடர் நலத்துறைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணயை நவ. 23-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment