அரையாண்டுத் தேர்வு நேரத்தில், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வருடாந்திர பணியிட மாற்றம் மற்றும் உபரி ஆசிரியர்கள் கலந்தாய்வு கடந்த மாதம் தான் முடிந்தது. ஆசிரியர்கள் புதிய இடத்துக்கு சென்று, பாடங்களை நடத்துகின்றனர்.
இந்நிலையில், அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கைக்கான தேவையை விட அதிகமாக இருக்கும், உபரி ஆசிரியர்களை, விரைவில் பணியிட மாற்றம் செய்ய உள்ளதாக கல்வித்துறையில் தகவல்கள் வெளியாகிஉள்ளன.
தற்போது கல்வி ஆண்டின் பெரும்பாலான வேலை நாட்கள் முடிந்து, அரையாண்டுத் தேர்வு நெருங்கியுள்ளது. ஆனால், நிறைய பாடங்கள் பாக்கி உள்ளதால், சிறப்பு வகுப்பு மற்றும் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தி, போர்ஷன் முடிக்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களை இடம் மாற்றினால், மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்.பல பள்ளிகளிலும் புதிய ஆசிரியர்கள் இடம் மாறும்போது, பாடங்கள் நடத்துவதில் பின்னடைவு ஏற்படும் என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment