பலத்த மழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதைக் கருத்தில் கொண்டு, இணைப்புக் கல்லூரிகளுக்கான பருவத் தேர்வுகளை சென்னைப் பல்கலைக்கழகம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது.
சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கடந்த 8 ஆம் தேதி முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக பல்கலைக்கழகங்கள் பருவத் தேர்வுகளை ஒத்திவைத்தன. சென்னைப் பல்கலைக்கழகமும் நவம்பர் 12 முதல் 25 வரை நடக்க இருந்த இணைப்புக் கல்லூரிகளுக்கான பருவத் தேர்வுகளை ஒத்திவைத்தது.
இந்த நிலையில், பல பகுதிகளில் இயல்புநிலை இன்னும் திரும்பாததைத் தொடர்ந்து வருகிற 28-ஆம் தேதி வரை நடக்க இருந்த பருவத் தேர்வுகள் மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் இரா. தாண்டவன் அறிவித்தார். ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகளுக்கான மறு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment