Pages

Thursday, November 19, 2015

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு!!


சென்னை: தொலைதொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் டெலிகாம் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் டிசம்பர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம் என பிஎஸ்என்எல் அறிவுறுத்தியுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 147 இடங்கள் காலியாகவுள்ளன.
இதில் எஸ்சி பிரிவுக்கு 25-ம், எஸ்டி பிரிவுக்கு 77-ம், ஓபிசி பிரிவுக்கு 45-ம் வழங்கப்படும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற மத்திய அரசு, மாநில அரசு தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட்டிலிருந்து 3 ஆண்டு என்ஜினீயரிங் டிப்ளமோ படித்து முடித்திருக்கவேண்டும். வயது 18 முதல் 30-க்குள் இருக்கவேண்டும். நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் டிசம்பர் 1-ம் தேதி முதல் 10-ம் தேதிக்குள் அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


No comments:

Post a Comment