Pages

Wednesday, November 11, 2015

சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்


கோவை ;பாரதியார் பல்கலையில் ஐ.ஏ.எஸ்., முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சியில் பங்கேற்பதற்கான நுழைவுத்தேர்வுக்கு, வரும் டிச., ௧௦ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அடுத்தாண்டு ஆகஸ்டில் ஐ.ஏ.எஸ்., முதல் நிலை தேர்வு நடக்கிறது.


இத்தேர்வுக்கு, பாரதியார் பல்கலையின் அண்ணா ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில், அடுத்தாண்டு பிப்., ௮ முதல் முழுநேர இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. நுழைவுத்தேர்வில் பங்கேற்க விரும்புவோர், www.bu.ac.in/news.asp என்ற பல்கலை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்கலாம். அல்லது பல்கலையில் நேரில் விண்ணப்ப படிவம் பெற்றும் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 'டாக்டர் பத்மநாபன், ஒருங்கிணைப்பாளர் / பயிற்சி இயக்குனர், அண்ணா ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம், பாரதியார் பல்கலை, கோவை - ௪௬' என்ற முகவரிக்கு வரும், டிச., ௧௦க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment