அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்ட தங்க நாணயத்தை பிரதமர் மோடி இன்று அறிமுகப்படுத்த உள்ளார்.
இது தவிர தங்க டெபாசிட் திட்டம் மற்றும் தங்கப் பத்திரத் திட்டம் ஆகிய இரு திட்டங்களையும் பிரதமர் அறிமுகப்படுத்துவார் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
முதன்முறையாக இதுபோன்ற நாணயங்களை அரசு வெளியிட உள்ளது என்றும் அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் 5 மற்றும் 10 கிராம் நாணயங்களும் 20 கிராம் எடையில் கட்டியும் கிடைக்கும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
போலியாக தயாரிக்க இயலாத வகையிலும் எளிதில் மறுசுழற்சி செய்யக் கூடியது என்பது போன்ற சிறப்பம்சங்களை இந்நாணயங்கள் கொண்டுள்ளதாகவும் இவை மத்திய அரசு அமைப்பான எம்எம்டிசியின் விற்பனையகங்களில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் அடிப்படையிலான 2 புதிய முதலீட்டுத் திட்டங்களால் 20 ஆயிரம் டன் தங்கம் வெளிவரலாம் என்றும் வங்கிகளில் 5 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் நிதி நடமாட்டம் அதிகரிக்கும் என்றும் அரசு எதிர்பார்க்கிறது
No comments:
Post a Comment