Pages

Wednesday, November 11, 2015

குரூப் 4 தேர்வுக்கான முதல்கட்ட கலந்தாய்வு : சென்னையில் 16-ம் தேதி தொடக்கம்


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிக்கை:குரூப் 4 பதவியில் அடங்கிய (2013-14 மற்றும் 2014-15) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்ய கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் கடந்த மே 22ம் தேதி வெளியிடப்பட்டது. 


இந்நிலையில், இத்ேதர்வுக்கான முதல்கட்ட கலந்தாய்வு சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் வருகிற 16ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரை நடைபெறும். காலை 10 மணி அளவில் கலந்தாய்வு தொடங்கும்.

கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் தரவரிசை அடங்கிய தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு அதற்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரருக்கு அழைப்புக் கடிதம் விரைவஞ்சல் மூலமும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. எனவே, கலந்தாய்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்ட  விண்ணப்பதாரர் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை, அவர்களின் இடஒதுக்கீட்டு பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், தகுதியுடைமை மற்றும் நிலவும் காலிப்பணியிடத்துக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர். எனவே அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. விண்ணப்பதாரர் கலந்தாய்வுக்கு வரத்தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment