Pages

Thursday, November 12, 2015

அண்ணா பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு



தொடர் மழை காரணமாக வியாழக்கிழமை நடைபெற இருந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.


அண்ணா பல்கலைக்கழக நவம்பர் - டிசம்பர் பருவத் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமையன்று ஒரு நாள் தேர்வுகளை மட்டும் பல்கலைக்கழகம் ஒத்திவைத்து அறிவித்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் கூறியது:

தொடர் மழை காரணமாக பல்கலைக்கழக துறைகளுக்கும், இணைப்புக் கல்லூரிகளுக்கும் வியாழக்கிழமை நடத்தப்பட இருந்த தேர்வுகள் மட்டும் ஒத்தி வைக்கப்படுகிறது.

இந்தத் தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். மற்ற நாள்களில் நடக்க உள்ள தேர்வுகள் திட்டமிட்டபடி தொடர்ந்து நடைபெறும் என்றார் அவர்.

No comments:

Post a Comment