Pages

Saturday, November 21, 2015

2016 ஜே.இ.இ.: டிச.1 முதல் விண்ணப்பிக்கலாம்


2016-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ.) அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., ஐ.ஐ.டி. ஆகிய மத்திய அரசு நிதியுதவியின் கீழ் இயங்கி வரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவன படிப்புகளில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.


இந்தத் தேர்வு இரண்டு நிலைகளாக நடத்தப்படுகிறது. முதலில் ஜே.இ.இ. பிரதானத் தேர்வும், பின்னர் ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வும் நடத்தப்படும்.இதில், ஜே.இ.இ. பிரதானத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் படிப்புகளில் சேர முடியும்.ஜே.இ.இ. பிரதானத் தேர்வில் தகுதி பெற்று, அடுத்ததாக நடத்தப்படும் ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்விலும் தகுதி பெறுபவர்கள்ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி. கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.இப்போது 2016-ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. பிரதானத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.எழுத்துத் தேர்வு 2016 ஏப்ரல் 3-ஆம் தேதியன்றும், ஆன்-லைன் தேர்வுகள் 2016 ஏப்ரல் 9,10 ஆகிய தேதிகளிலும்நடத்தப்பட உள்ளன. மேலும் விவரங்களை www.jeemain.nic.in இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment