தீபாவளி பண்டிகையின்போது பட் டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது தொடர்பாக மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண் ணப்பன் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து மாணவர்கள் உறுதி மொழி எடுக்குமாறும் அறிவுறுத்தி யுள்ளார். உறுதிமொழி விவரம்:
$ பட்டாசுகளை கவனமாகவும் விபத்தில்லாமலும் வெடிப்போம்.
$ பெரியவர்கள் உடனிருக்க பட்டாசுகளை வெடிப்போம்.
$ பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக பாத்திரங்களில் தண்ணீர், மணல் ஆகியவற்றை தயாராக வைத் துக்கொள்வோம்.
$ திறந்தவெளிகள் மற்றும் பொது இடங்களில் கூட்டாக பட்டாசுகளை வெடிப்போம்.
$ இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை பட்டாசுகளை வெடிக்க மாட்டோம்.
$ அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்ப்போம்.
$ மருத்துவமனை, பள்ளிகள் முதலானவை அமைந்துள்ள அமைதிப் பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்க மாட்டோம்.
$ குடிசைகள் மற்றும் எளிதில் தீ பிடிக்கும் பொருட்கள் இருக்கும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்க மாட்டோம்.
$ ஒலியைக் குறைப்போம், செவியைக் காப்போம்.
$ கொண்டாடுவோம், கொண் டாடுவோம், விபத்தில்லா தீபாவளி யைக் கொண்டாடுவோம்.
மேற்கண்ட உறுதிமொழியை எடுக்குமாறு பள்ளி மாணவ-மாண விகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment