தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியாக ராஜேஷ் லக்கானி ஆணையராக நியமிக்கப்பட்டார். தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சந்தீப் சக்சேனா, அண்மையில் தலைமை தேர்தல் ஆணையத்தில் துணை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியை தேர்வு செய்வதற்கான கூட்டம் டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று நடைபெற்றது. அதில் தமிழக அரசு பரிந்துரைத்த மூன்று அதிகாரிகளில் ராஜேஷ் லக்கானி தேர்வு செய்யப்பட்டார். தமிழக அரசின் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசின் முதன்மை செயலராக பொறுப்பு வகித்து வருகிறார் ராஜேஷ் லக்கானி. ராஜேஷ் லக்கானியின் நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிகிறது.
No comments:
Post a Comment