Pages

Thursday, November 12, 2015

POSTMAN EXAM - HALL TICKET இணையதளத்தில் வெளியீடு



தபால்காரர் (போஸ்ட்மென்), மெயில் கார்டு தேர்வுக்கான அனுமதிச் சீட்டை விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என தமிழக அஞ்சல் வட்டம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அஞ்சல் வட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:



தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் உள்ள அஞ்சலக கோட்டம், அஞ்சலகப் பிரிப்பக கோட்டங்களில் காலியாக உள்ள 143 தபால்காரர் பணியிடங்களுக்கும், ஒரு மெயில் கார்டு பணியிடத்துக்கும் எழுத்துத் தேர்வு வாயிலாக ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்கான தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வை எழுத தகுதியுள்ள நபர்களுக்கான அனுமதிச்சீட்டு www.dopchennai.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இணையதளத்தில் இருந்து தங்களின் அனுமதிச் சீட்டை (ஹால் டிக்கெட்) விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அஞ்சல் வாயிலாக அனுமதிச் சீட்டு அனுப்பப்படாது.

அனுமதிச் சீட்டில் தேர்வு மையம், நேரம் உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை விண்ணப்பதாரர்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment