Pages

Monday, November 16, 2015

நாளை முதல் அனைத்து சேவைகளுக்கும் சேவை வரி அரை சதவீதம் உயர்வு தூய்மை இந்தியா திட்டத்திற்காக உயர்த்தப்பட்ட சேவை வரி நாளை முதல் அமலுக்கு வருகிறது.



தொலைபேசி கட்டணம், ஓட்டலில் சாப்பிடுவது மற்றும் தங்குவதற்கான கட்டணம், காப்பீடு தொகை போன்றவற்றுக்கு தற்போது 14 சதவீதம் சேவை வரி விதிக்கப்படுகிறது. கடந்த மே 31–ந்தேதி வரை 12.36 சதவீதம்தான் சேவை வரி விதிக்கப்பட்டது. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, ஜூன் 1–ந்தேதி முதல் சேவை வரி 14 சதவீதமாக உயர்த்தப்பட்டது.


அதன்பின்னர் தூய்மை இந்தியா திட்டத்துக்கு நிதி திரட்டுவதற்காக, மக்களுக்கு அளிக்கப்படும் பல்வேறு சேவைகள் மீது விதிக்கப்படும் சேவை வரியை மத்திய அரசு அரை சதவீதம் உயர்த்தியது. அதனால், சேவை வரி 14.5 சதவீதமாக இருக்கும்.

இந்த அரை சதவீத சேவை வரி உயர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. எனவே, வருகிற 15–ந்தேதி முதல் சேவை வரியின் கீழ் வரும் அனைத்து பணிகள் மற்றும் சேவைகளுக்கும் 14.5 சதவீதம் சேவை வரி செலுத்த வேண்டும். இந்த கூடுதல் அரை சதவீத சேவை வரியின் மூலம் இந்த நிதி ஆண்டில் அரசுக்கு ரூ.400 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வரி உயர்வின் மூலம் கிடைக்கும் தொகை முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்துக்காக செலவிடப்படும்.

No comments:

Post a Comment