Pages

Friday, November 20, 2015

மழை பாதிப்பு: சென்னை, புறநகரில் மாணவர்களுக்கு மீண்டும் விலையில்லா கல்வி உதவிகள் - பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு


மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு மீண்டும் விலையில்லா கல்வி உதவிகள் வழங்கப்பட உள்ளன.

      தொடர் மழையால், 4 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். வெள்ள நீர் வடியாததாலும், பள்ளிகளில் உள்ள ஈரப்பதம் காரணமாகவும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நவ. 22-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை வகுப்பு வாரியாக தெரிவிக்குமாறு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
வீடுகளை இழந்த மாணவர்களுக்கு மீண்டும் விலையில்லா சீருடை, புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உதவிகள் வழங்கப்படுவதற்காக மேற்கண்ட விவரங்கள் திரட்டப்படுவதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment