மழையால் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி வகுப்பறைகளுக்கு, பூட்டு போட, பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை:
* தொடர் மழையால், பள்ளிகளின் சுற்றுச்சுவர் ஈரப்பதத்துடன் காணப்படும். எனவே, சுற்றுச்சுவரிலிருந்து குறைந்தது, 20 அடி துாரம் வரை, மாணவர்கள் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
* மழையால் பாதிக்கப்பட்ட வகுப்பறைகளை திறக்க வேண்டாம். அவற்றை பூட்டி, மாணவர்கள் அருகே செல்லாமல் பாதுகாக்க வேண்டும்
* மின் கசிவை கண்டறிந்து, மின் இணைப்பை தற்காலிகமாக துண்டிக்க வேண்டும
்*பள்ளி வளாகத்தில் நீர் தேங்கியிருந்தால் அதை அகற்றுவதுடன், திறந்த நிலையில் தொட்டிகள், பள்ளங்கள் இருந்தால் அவற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும
்* வெள்ளம் வரும் இடங்கள், நீர் நிலைப்பகுதிகளை தவிர்க்க மாணவர்களுக்கு அறிவுறுத்துவதுடன், 'வெள்ளத்தை வேடிக்கை பார்க்க செல்லக்கூடாது' என, எச்சரிக்க வேண்டும்
* பருவ மழையால், 'சிக்-குன் குனியா, டெங்கு' போன்ற காய்ச்சல் வராமல் முன்னெச்சரிக்கையாக இருக்க, மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
No comments:
Post a Comment