தினமும் 2 மணி நேரம் மொபைல் போனில் செலவிடும் இந்திய இளைஞர்கள்!
இந்தியா இளைஞர்கள், தினந்தோறும் 2.2 மணி நேரத்தை தங்களது மொபைல் போனில் செலவிடுவதாக டி.என்.எஸ்., நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது."டி.என்.எஸ்.,' என்ற சர்வதேச ஆய்வு நிறுவனம், சர்வதேச அளவில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்திய ஆய்வு முடிவில், இந்தியாவிலுள்ள 16-30 வயதுடைய இளம் வயதினர்கள் தினமும் சராசரியாக 2.2 மணி நேரத்தை தங்களது மொபைல் போனில் செலவிடுகின்றனர். இவ்வாறாக ஆண்டுக்கு 34 நாட்கள் தங்கள் மொபைல் போனுக்காக நேரத்தை செலவழிக்கின்றனர். இதுவே சர்வதேச இளைஞர்கள் நாளொன்றுக்கு 3.2 மணி நேரம், அதாவது ஆண்டுக்கு 49 நாட்கள் மொபைல் போனில் நேரத்தை செலவிடுகின்றனர். அதேபோல், இந்தியாவில் 31-45 வயதுடையோர் சராசரியாக 1.8 மணி நேரத்தையும், 46-65 வயதுடையோர் 1.5 மணி நேரத்தையும் மொபைல் போனில் செலவிடுகின்றனர்.
இந்தியாவில், வாரந்தோறும் இண்டர்நெட் பயன்படுத்தும் இளைஞர்களில், சுமார் 85% பேர் ஸ்மார்ட்போன்கள் வைத்துள்ளனர். இதில் சமூக வலைதளங்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். அதில் 43% பேர் தினமும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர்; 42% பேர் ஆன்லைனில் வீடியோக்களைப் பார்க்கின்றனர். இளைஞர்களில் 11% பேர் மொபைல் போன் வழியே ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் செலுத்தி, பொருட்களை வாங்கும் முறைகளை வாரம்தோறும் பின்பற்றுகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள 16-30, 31-45, 46-65 வயதுடை 3 பிரிவினருமே மொபைல் போனில் செலவிடும் நேரத்தில் பாதியை சமூக வலைதளங்களுக்காக பயன்படுத்துவதும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment