Pages

Saturday, November 28, 2015

இடை நின்ற மாணவர்களின் பட்டியல் தயாரிக்க உத்தரவு


பள்ளிகளில், 8ம் வகுப்புக்குள் படிப்பை நிறுத்திய மாணவர் பட்டியலை கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின், கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின் படி, 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், இலவசமாக, கட்டாயம் கல்வி வழங்க வேண்டும்; இதற்கு மத்திய அரசு மூலம் நிதி உதவி அளிக்கப்படுகிறது. 


இந்த திட்டத்தின் கீழ், மாணவர், இடையில் படிப்பை விடாமல் பார்த்து கொள்ளவும், படிப்பை விடும் மாணவர்களை, தாமதமின்றி, அவர்களின் நிலையை அறிந்து, கல்வி வழங்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதன்படி, இந்த ஆண்டு இதுவரை பள்ளிகளில் சேர்ந்து, 8ம் வகுப்புக்குள், பள்ளிக்கு வராமல் இடையில் நின்ற மாணவர் பட்டியலை தயாரிக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல், தங்கள் பகுதிகளில், 14 வயதுக்கு உட்பட்ட, பள்ளிக்கு படிக்கவே வராத மாணவர் பட்டியலை தயாரித்து அனுப்பும்படியும், அனைவருக்கும் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment