,சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழைக்கு கடந்த ஒரு வாரத்தில் பலி எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. தாழ்வு நிலை மையம் கொண்டிருப்பதால் புயலாக உருவெடுக்கலாம் என்றும் இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என்றும் வரும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் சென்னை, திருவள்ளூர் , திருவண்ணாமலை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மைய இயக்குனர் ரமணன் கூறியுள்ளார்.
முதல்வர் தொகுதியில் அமைச்சர்கள் ஆய்வு: சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. அப்பகுதியில் மழைநீர் பாதிப்பை ஆய்வு செய்யும் பொருட்டு, அமைச்சர்கள் வேலுமணி, வளர்மதி, கோகுல இந்திரா, மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் ஆய்வு செய்து வருகின்றனர்.மழையின் காரணமாக மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. காவிரி ஆற்றில் மூழ்கி 2 பேர் பலி: நாமக்கல் மாவட்டம் கொத்தமங்கலம் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச்சென்ற 2 பெண்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேடர்பாளையம் போலீசாரின் உதவியுடன் பலியான பெண்களின் உடல்களை தேடும்பணி நடைபெற்று வருகிறது. கடலில் வீணாக கலந்த 41 டி.எம்.சி. மழைநீர்: வடகிழக்கு பருவமழையின் காரணமாக, சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டம், இந்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடலூரில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது. கடந்த 9 ஆம் தேதி மட்டும், 40 டி.எம்.சி.தண்ணீர் வங்கக்கடலில் கலந்துள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர் ஜெயபால் முற்றுகை : வடகிழக்கு பருவமழையின் காரணமாக, சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டம், இந்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் அமைச்சர்கள், இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சிதம்பரம் அருகே தில்லை பேரூராட்சி பகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொழுக்குதுறை மீனவ கிராமத்தை அமைச்சர் பார்வையிடவில்லை என்று கூறி கோபத்தில் இருந்தனர். அமைச்சர் அப்பகுதியாக மீண்டும் திரும்பி வரும்போது அவரது காரை சிறை பிடித்ததோடு மட்டுமல்லாது, தகாத வார்த்தைகளாலும் அமைச்சரை அப்பகுதி மக்கள் திட்டித்தீர்த்தனர். இதன் காரணமாக, அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. அந்த மீனவ கிராமத்தை பார்வையிட்டு, உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்ததை தொடர்ந்து முற்றுகைப்போராட்டம் கைவிடப்பட்டது. வடகிழக்கு பருவமழையின் காரணமாக, தமிழகத்தில் பெய்துவரும் மழையில் சிக்கி இதுவரை 55 பேர் பலியாகியிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நேற்று (12ம் தேதி) வரை கடலூர் மாவட்டத்தில் 7 பேர் உட்பட 48 பேர் பலியாகியிருந்ததை தொடர்ந்து, இன்று (13ம் தேதி) அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 55 பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழிசை முற்றுகையால் பரபரப்பு : கடலூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை பாதிப்பு மற்றும் வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய வந்த பா.ஜ. மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனை, அப்பகுதி மக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பெரியகாட்டுபாளையம் பகுதியில் மழை பாதிப்பு பகுதிகளை தமிழிசை சவுந்தர்ராஜன் ஆய்வு செய்தார். பெரியகாட்டுபாளையம் ஓடையில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தி்ல் சிக்கி 7 பேர் பலியாகியுள்ளனர். 200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இவற்றில் 17 பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. நிவாரண உதவிகளை வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்று கூறி, தமிழிசை சவுந்தர்ராஜனின் காரை, அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். இதன் காரணமாக, அங்கு பரபரப்பு நிலவியது. இந்த மழை பாதிப்பு மற்றும் வெள்ள தேசம் குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நிவாரணம் கிடைக்க உறுதி அளித்ததன்பேரில், மக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். மதுராந்தம் ஏரியிலிருந்து நீர் திறப்பு : காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரியில், நீ்ர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, வினாடிக்கு 7ஆயிரம் கனஅடி என்ற வீதத்தி்ல உபரிநீர், ஏரியில் இருந்து திறந்து விடப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் கலெக்டர் கஜலெட்சுமி கூறியுள்ளார். மழையால் பாதிக்கப்பட்டுள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மேலும் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தி்ல் பெய்துவரும் கனமழையின் காரணமாக, ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், அணை எந்நேரமும் திறக்கப்படும் வாய்ப்பு இருப்பதால், கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 34 செ.மீ. அளவிற்கு மழை பெய்துள்ளது. புழல் மற்றும் செங்குன்றம் பகுதிகளில் 21 செ.மீ அளவிற்கு மழை பெய்துள்ளது. செய்யாற்றில் 19 செ.மீ. மழை பெய்துள்ளது. முதல்வர் நிவாரணம் அறிவிப்பு : சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. இதில் சிக்கி மரணமடைந்த 7 பேருக்கு தலா ரூ. 4 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீர் திறப்பு: பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை கொட்டியுள்ளதால், வினாடிக்கு ஆயிரம் கனஅடி என்ற அளவில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன்காரணமாக, குழி்த்துறை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் ஏரியும் முழு கொள்ளளவை எட்டியுள்ளதையடுத்து, அங்கிருந்தும் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment