தமிழகம் முழுவதும் சுமார் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான தொடர் நீட்டிப்பு ஆணை புதன்கிழமை வெளியிடப்பட்டது. அரசு ஆணை எண் 110, 120, 175, 193, 212 ஆகியவற்றின்
கீழ் 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் ஊதியம் பெறுகின்றனர். ஆனால், இந்த ஆசிரியர்களுக்கான ஊதிய தொடர் நீட்டிப்பு ஆணை இதுவரை வழங்கப்படவில்லை என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் புகார் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான தொடர் நீட்டிப்பு ஆணை புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment