தமிழ்நாட்டில் டிசம்பர் 6-ம் தேதியான ஞாயிறு அன்று வங்கிகள் இயங்கும் என்று மத்திய அரசின் நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மழை வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு, மின்சாரம் துண்டிப்பு, வங்கிகள் இயக்கம் நிறுத்தம், ஏடிஎம் சேவை முடக்கம் என பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.
மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட வங்கி சேவையையோ, ஏடிஎம் சேவையோ பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.
இந்நிலையில், பொதுமக்கள் வசதிக்காக டிசம்பர் 6 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வங்கிகள் இயங்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
வங்கிகளின் அலுவல் நேரத்தை நீட்டிக்கவும், படகுகள் மூலம் நடமாடும் ஏடிஎம்களை செயல்படுத்தவும் வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment