தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் இந்தியாவின் 10-வது திறந்தவெளி பல்கலைக்கழகமாக 2002-ம் ஆண்டு தமிழக அரசால் துவங்கப்பட்டதாகும். இப்பல்கலைக்கழகத்திற்கு தற்போது 12 பி சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில், பல்கலைக்கழக மானியக் குழுவான யூ.ஜி.சி. இந்த பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தியது. அதில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், நிர்வாகம் ஆகியவை இப்பல்கலைக்கழகத்தில் சிறப்பாக உள்ளதாகவும், புதிய பல படிப்புகளை அறிமுகப்படுத்தி இருப்பதாலும் திருப்தியான கல்வித்தரம் இருப்பதாக யூ.ஜி.சி. தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில், 12 பி சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு அந்தஸ்து வாயிலாக பல்வேறு ஆராய்ச்சி படிப்புகள் மற்றும் கல்வி சம்பந்தமாக பல்கலைக்கழக மானியக்குழுவால் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியுதவிகளை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
12 பி சிறப்பு அந்தஸ்து கிடைத்திருப்பதை அடுத்து வரும் மாதங்களில் பல புதிய படிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளதாக தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment