சென்னை:'முதுநிலை மருத்துவ மாணவர் தேர்வை, தள்ளி வைப்பது குறித்து, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நடக்கும் மருத்துவ முகாம்களில், அரசு முதுநிலை மருத்துவ மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் படிக்க அவகாசம் தரும் வகையில், ஏப்., மாதம் நடத்தப்படும், முதுநிலை மருத்துவ தேர்வை,
ஜூன் மாதத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.'முதுநிலை மருத்துவ படிப்புகள் ஜூலை மாதம் தான் முடிகின்றன. ஆனால், இதற்கான தேர்வை, ஏப்., மாதமே நடத்துவது சரியல்ல. எப்போதும், ஜூன் மாதத்தில் தான் நடத்தப்பட வேண்டும்' சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
முதுநிலை மருத்துவ தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை வந்துள்ளது. இதுகுறித்து, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மருத்துவ கல்வி இயக்ககம், மாணவர்களின் கருத்தை அறிந்து, அரசுடன் பேசித் தான் இதில் முடிவு எடுக்க முடியும்.- ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை செயலர்
No comments:
Post a Comment