Pages

Monday, December 28, 2015

தெற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: தென் மாவட்ட கடலோர பகுதிகளில் மழை பெய்யும்


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் 31-ந் தேதி முடிவடைகிறது. சில வருடம் ஜனவரி 5-ந் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இந்த வருட வடகிழக்கு பருவமழை கனமழையாக பெய்துவிட்டது. இதனால் மழை வெள்ள சேதம் பெரிய அளவில் ஏற்பட்டது.


இந்த நிலையில் தெற்கு வங்க கடலில் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று முன்தினம் உருவானது. இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:-

நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. எந்த இடத்திலும் மழை அளவு ஒரு செ.மீட்டர் கூட பெய்யவில்லை. அதற்கு குறைவாகத்தான் பெய்து இருக்கிறது.

அடுத்த 2 நாட்களுக்கு இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) தென் மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். கனமழைக்கு வாய்ப்பு இல்லை. மற்ற வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.

சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். ஒருசில நேரங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம்.

இவ்வாறு வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment