ஆம்பூர் அருகே உள்ள வெள்ளக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் எஸ்.தட்சிணாமூர்த்தி வரவேற்றார். மாதனூர் ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ்.திருப்பதி, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் டி.நடராஜன் ஆகியோர் கண்காட்சியை தொடக்கி வைத்துப் பார்வையிட்டனர்.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆர்.தமிழ்செல்வன், ஆசிரியர் பயிற்றுநர்கள் கே.ராமகிருஷ்ணன், சின்னசாமி, மனோன்மணி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் பி. வேலு ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment