வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கணிதத் திறனறிவுத் தேர்வை பள்ளி மாணவர்கள் 1,100 பேர் எழுதினர்.
மாநிலம் முழுவதிலும் அரசு, தனியார் பள்ளி மாணவர்களிடம் கணிதத் திறனை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட அளவிலான கணிதத் திறனறிவுத் தேர்வுப் போட்டிகள் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் முழுவதிலும் அரசு, தனியார் பள்ளிகளில் 5 முதல் 8-ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தனித்
தனியாகத் திறனறிவுத் தேர்வு நடைபெற்றது. ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற தேர்வை 1,100 மாணவ, மாணவிகள் எழுதினர். இதற்கான பரிசளிப்பு விழா வருகிற ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை மாவட்ட அறிவியல் மைய அலுவலர் (பொறுப்பு) ஜெ.ஆர்.பழனிசுவாமி தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment