காரைக்குடி:''ஜனவரியில் வீடுதோறும் 'ஆதார்' விபரங்களை சேகரிக்கும் பணியில் 70 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர்,'' என மக்கள் தொகை கணக்கெடுப்பு செயலாக்க துறை இணை இயக்குனர் கிருஷ்ணராவ் பேசினார்.அழகப்பா பல்கலை பொருளாதார மற்றும் ஊரக மேம்பாட்டு துறை, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், 'மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல் பரப்பல்' கருத்தரங்கு, துணைவேந்தர் சுப்பையா தலைமையில் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் நாராயணமூர்த்தி வரவேற்றார். இதில் கிருஷ்ணராவ் பேசியதாவது:'ஆதார்' அட்டை கணக்கெடுப்புக்கு 'பெல்' நிறுவனத்தின் கீழ் 640 மையங்களில், ஒப்பந்த நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதுவரை 6.23 கோடி பேருக்கு புகைப்படம், கைரேகை, கருவிழி விபரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. இதில் 5.63 கோடி பேருக்கு 'ஆதார்' அட்டை வழங்கப்
பட்டுள்ளது. 2016 மார்ச்சுக்குள் 100 சதவீத பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு சேவை மையங்கள் மூலம் 'ஆதார்' அட்டை பெற, மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.
ஜன., 18 முதல் பிப்., 5 வரை தமிழகத்தில் வீடுதோறும் 'ஆதார்' விபரங்களை சேகரித்தல்,
திருத்தம் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளில் 70 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.
பள்ளி, கல்லுாரிகளில் சிறப்பு முகாம் நடத்தி, மாணவர்களுக்கு 'ஆதார்' அட்டை வழங்குவது உறுதி செய்யப்படும்.கடந்த 2011 மக்கள் தொகை கணக்கின்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121.1 கோடி. கடந்த 2001ல் இது, 102.2 கோடியாக இருந்தது, என்றார்.
No comments:
Post a Comment