Pages

Thursday, December 31, 2015

மழையால் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஏப்ரல் மாத தேர்வு 10 நாட்கள்

 தள்ளிவைப்பு: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி
மழை, வெள்ளம் காரணமாக என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஏப்ரல் மாதம் நடைபெறக்கூடிய தேர்வுகள் 10 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டு மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தெரிவித்தார்.


தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளம் பாதிப்பு காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் 1, 3, 5, 7, 9, செமஸ்டர் தேர்வுகள் ஒருமாதம் தள்ளிவைக்கப்பட்டன. அந்த தேர்வுகள் ஜனவரி மாத இறுதியில் தான் முடிவடையும்.

2, 4, 6, 8, 10 செமஸ்டர் வகுப்புகள் வழக்கமாக ஜனவரி மாதம் 18-ந்தேதி தொடங்கும். ஆனால் இந்த வருடம் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டதால், வகுப்புகள் பிப்ரவரி மாதம் 1-ந்தேதி தொடங்க இருக்கின்றன.

2, 4, 6, 8 மற்றும் 10-வது பருவத்திற்கு உரிய மாணவ-மாணவிகள் அனைவருக்கும் வழக்கமாக தேர்வுகள் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறும். ஆனால் இந்த வருடம் தேர்வுகள் 10 நாட்கள் வரை தள்ளிவைக்கப்பட்டு மே மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.

மேலும் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் சனிக்கிழமை தோறும் கல்லூரிகளில் வகுப்புகள் நடக்கும்.

இந்த தகவலை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம், பதிவாளர் கணேசன் ஆகியோர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment