Pages

Wednesday, December 30, 2015

'ஆன்லைன்' மாணவர் சேர்க்கை யூ.ஜி.சி., கண்டிப்பான உத்தரவு


பெங்களூரு:'கல்வி நிறுவனங்கள், 'ஆன் லைன்' எனப்படும், இணையம் வாயிலாகவே மாணவர்களை சேர்க்க வேண்டும்' என, யூ.ஜி.சி.,எனப்படும், பல்கலைக்கழக மானிய கமிஷன் தெரிவித்துள்ளது.அதன் தலைவர் வேத் 
பிரகாஷ், பெங்களூருவில் கூறியதாவது:கல்வி நிறுவனங்கள் சிறப்பாகவும், ஒளிவுமறைவின்றியும் செயல்பட, ஆன்லைன் மூலமே மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக, அனைத்து கல்வி நிறுவனங்
களுக்கும் உத்தரவு பிறப்பித்து, யூ.ஜி.சி., அறிக்கை அனுப்பிஉள்ளது.ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடப்பது, பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் பெரும் பயனுள்ளதாக இருக்கும். ஆன்லைன் மூலம், மாணவர் சேர்க்கையை, இப்போது நடத்தி வரும் பல்கலைக்கழகங்கள், அதற்கு பயன்படுத்தப்படும், 'சாப்ட்வேர்' நடைமுறை ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். குறிப்பிட்ட படிப்புகளுக்கு மட்டும், ஆன்லைன் மூலம் மாணவர்களை சேர்த்து வரும் பல்கலைக்கழகங்கள், 2016 -- 17ம் கல்வியாண்டில், எல்லா படிப்புகளுக்கும், ஆன்லைன் மூலமே, மாணவர்களை சேர்ப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை கூற வேண்டும்.

இதுதொடர்பாக, அடுத்த மாதம், பல்கலைக்கழகங்களுடன், ஆய்வு கூட்டம் நடத்தப்படும். இவ்வாறு வேத் பிரகாஷ் கூறினார்.

No comments:

Post a Comment