காட்டங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசு நடுநிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவிகளை பி.எஸ்.அப்துர் ரகுமான் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வழங்கினர்.
காரணைப் புதுச்சேரி அரசு உயர்நிலைப் பள்ளி, குமிழி ஆரம்பப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, கூடுவாஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த 1,725 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள நோட்டுப் புத்தகங்கள், எழுதுபொருள்கள் உள்ளிட்ட கல்விகள் பி.எஸ்.அப்துர்ரகுமான் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மன்றம் சார்பில் வழங்கப்பட்டன.
இதுகுறித்து துணைவேந்தர் வி.எம்.பெரியசாமி கூறியதாவது:
மழை-வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை பல்கலைக்கழகம் சார்பில் வழங்கிவருகிறோம். அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவ பேராசிரியர்கள் முன் வந்தனர்.
இதையடுத்து, பல்கலைக்கழகத்தின் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குக் கல்வி உதவிகளை வழங்கினோம் என்றார்.
மாணவர் சேர்க்கை இயக்குநர் வி.என்.ஏ.ஜலால், பதிவாளர் வி.முருகேசன், பேராசிரியர்கள் மன்றத்தைச் சேர்ந்த எஸ்.காஜா மைதீன், ஸ்ரீராம், பெர்னிக், அபுபக்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment