தேனி: அரசு, உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவுடன் முட்டை வழங்கப்படுகிறது. முட்டைகள் வினியோகிக்க ஒப்பந்தம் பெற்ற நிறுவனம், எந்தெந்த நாளில் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என ஒரு மாதத்திற்கு முன்பே தேவைபட்டியல் தயாரித்து அனுப்பிவிடும்.
'டிச.,௨௩ல் மிலாடிநபியை தொடர்ந்து, கிறிஸ்துமஸ் விடுமுறை' என ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் மிலாடிநபி டிச.,24க்கு மாற்றப்பட்டு, நேற்று பள்ளிகள் செயல்பட்டன. ஆனால், மாணவர்களுக்கு சத்துணவில் முட்டை வழங்கப்படவில்லை.
இதுகுறித்து தேனி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) லட்சுமி கூறுகையில், “திடீரென விடுமுறை நாள் மாற்றி அறிவிக்கப்பட்டு, பள்ளிகள் செயல்பட்டதால் நேற்று முட்டை வழங்க இயலவில்லை,” என்றார்.
No comments:
Post a Comment