Pages

Thursday, December 17, 2015

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக 12 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக 12 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் நிலவிவருகிறது.


இந்நிலையில், வங்கக்கடலில் தென் மேற்கு திசையில் இலங்கையை ஒட்டிய பகுதியில் மேலடுக்கு சுழற்சிநிலவுகிறது. இதனால் தென் மாவட்டங்களில சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாகநேற்று செங்கோட்டையில் 60 மிமீ மழை பெய்துள்ளது.

சாத்தூர் 40மிமீ, முதுகளத்தூர், சிவகங்கை 30 மிமீ, கழுகுமலை, புதுக்கோட்டை 20 மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், மேலடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்துள்ளதால் தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும். இது தவிர ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், விழுப்புரம்,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment