Pages

Monday, December 28, 2015

தலைப்புச்செய்திகள்மேலும்நுகர்வோரை குழப்பும் லேபிள்கள்; காலாவதி

தேதியை குறிப்பிடுவதில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு
பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்களின் பாக்கெட்டுகளின் லேபிள்களில் 'பெஸ்ட் பிபோர்' என்று குறிப்பிடப்பட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். அதாவது, இத்தனை மாதங்களுக்கு அல்லது நாட்களுக்கு முன்பாக உபயோகப்படுத்துவது நல்லது என்பதே அதன் பொருள். மற்றொன்றும் அதில் குறிப்பிடப்படுவது உண்டு. அந்த பொருள் காலாவதியாகும் சரியான தேதி. (எக்ஸ்பைரி டேட்)


லேபிள்களில் இவ்வாறு இருவேறு குறிப்புகள் காணப்படுவதால் நுகர்வோர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதாக சென்ற வாரம் தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் தெரிவித்து இருந்தது. இது சம்பந்தமாக உணவுத்தர நிர்ணய மற்றும் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தது.

உதாரணமாக, Best before six months என குறிப்பிட்டு இருந்தால் அந்த பொருளானது 6 மாதங்களுக்கு பிறகும் கூட மனிதர்கள் உண்பதற்கு ஏற்றது என்ற தவறான அர்த்தத்தை தருவதாக தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணைய தலைவர் டி.கே.ஜெயின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மத்திய நுகர்வோர் விவகாரம் மற்றும் உணவு, பொது வினியோகத்துறை மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இனி உணவு பொருட்களின் லேபிள்களில் காலாவதி தேதியை மட்டுமே குறிப்பிட வேண்டும். 'பெஸ்ட் பிபோர்' என்ற அர்த்தமில்லாத குறிப்பை பிரிண்ட் செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment