தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட 54 வாக்குறுதிகளையும் நிறைவேற்றியவர் முதல்வர் ஜெயலலிதா என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
ஏழை மக்களுக்கு திருமண நிதி உதவி, தாலிக்கு தங்கம் வழங்கும் விழா அரக்கோணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் தலைமை வகித்தார்.
இதில் 1,217 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கத்தை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
தேர்தலின் போது 54 வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டன.
அதில் திருமண நிதி உதவி, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமும் ஒன்று. பெண்களுக்காகவே அறிவிக்கப்பட்ட திட்டங்களில் சிறப்பு திட்டம் இது. தற்போது அறிவிக்கப்பட்ட 54 வாக்குறுதிகளையும் நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா. வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டில் 9,500 பேரும், இந்த 5 ஆண்டில் 43,925 பேரும் இந்த திட்டத்தில் பயனடைந்துள்ளனர். தமிழ்நாட்டிலேயே இந்த திட்டத்தில் பயனடைந்தோர் எண்ணிக்கை வேலூர் மாவட்டத்தில் தான் அதிகம் என்றார் அமைச்சர் கே.சி.வீரமணி.
விழாவில் எம்எல்ஏக்கள் சு.ரவி, வி.கே.ஆர்.சீனிவாசன், வேலூர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் ஏ.ஜி.விஜயன், மாவட்ட ஆவின் பால்வள நிறுவனத் தலைவர் வேலழகன், அரக்கோணம் நகர்மன்றத் தலைவர் எஸ்.கண்ணதாசன், நெமிலி ஒன்றியக்குழு தலைவர் கோமதிமணிவண்ணன், அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் துரைகுப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment