ஆசிரியர் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் அரசு கடைப்பிடித்து வரும் அணுகுமுறை, சமூக நீதிக்கு எதிராக இருப்பதுடன் ஆசிரியர் கல்வி படித்தோரின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் தகுதிகாண் மதிப்பெண் முறை கடைப்பிக்கப்படவில்லை.
தகுதிகாண் மதிப்பெண் முறை காரணமாக தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற சுமார் 75 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கின்றனர்.
எனவே, சமூக நீதியைக் காக்கும் வகையில் தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்து, காலியாக இருக்கும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளைக் கொண்டு அரசு நிரப்ப வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment