Pages

Tuesday, December 22, 2015

TNPSC - தேர்வு தேதிகள் மாற்றம்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் துறை தேர்வின் தேதி மாற்றப்பட்டு உள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'டிச., 24ம் தேதி, மிலாடி நபி வருவதால், அந்த நாளில் நடக்க இருந்த துறை தேர்வுகள், முன்கூட்டியே, டிச., 23ம் தேதி காலை மற்றும் மாலை வேளைகளில் நடக்கும்' என, தெரிவித்து உள்ளார். அதுபோல, மேலும் பிற தேர்வுகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.


*ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்குட்பட்ட கல்லுாரிகளில், டிச., 24ல் நடக்க இருந்த தேர்வுகள், ஜன., 4க்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது
*தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலையில், டிச., 24ல் நடக்க இருந்த தேர்வுகள், மூன்றாமாண்டு மாணவர்களுக்கு, ஜன., 5ம் தேதியிலும், ஐந்தாமாண்டு மாணவர்களுக்கு, ஜன., 22 தேதியிலும் நடத்தப்படும்.

No comments:

Post a Comment