Pages

Monday, December 28, 2015

டில்லியில் மாணவர்கள் மட்டம் போடுவதை தடுக்க 'எலக்ட்ரானிக் ஐ.டி., கார்டு' அறிமுகம்


பள்ளிக்கு செல்லாமல் மட்டம் போடும் மாணவர்களை கண்டறிய, 'எலக்ட்ரானிக் சிப்' பொருத்திய அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்த, டில்லி மாநில அரசு திட்டமிட்டுள்ளது. டில்லியில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். டில்லி அரசின் புதிய திட்டம் பற்றி, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:


டில்லியில், 1,000 அரசு பள்ளிகள் உள்ளன. அவற்றில், 15 லட்சம் பேர் படிக்கின்றனர். மாணவ, மாணவியர், பள்ளிக்கு செல்லாமல் மட்டம் போடுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், அவர்களின் பெற்றோருக்கு தெரிவிக்கவும், எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்ட அடையாள அட்டைகளை மாணவர்களுக்கு வழங்க, டில்லி அரசு திட்டமிட்டு உள்ளது. பள்ளியில் நிறுவப்படும் கண்காணிப்பு கேமராக்களுடன் எலக்ட்ரானிக் அடையாள அட்டைகள் இணைக்கப்படுவதால், மாணவ, மாணவியரின் நடமாட்டத்தையும், அவர்கள் பள்ளிக்கு மட்டம் போடுவதையும் கண்டறிய முடியும்.

டில்லியில், அறிவியல், விளையாட்டு, வணிகம் போன்ற பல்வேறு துறைகளில் தனித்துவத்துடன் கல்வி வழங்கும், 10 பள்ளிகள் கொண்ட, பள்ளி கிராமத்தை நிர்மாணிக்க, டில்லி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, கிழக்கு டில்லியில், 30 ஏக்கர் நிலம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம், ஓராண்டில் துவங்கப்படும். இவ்வாறு மணீஷ் சிசோடியா கூறினார். '

No comments:

Post a Comment