சிறப்பு முகாம்கள் மூலம் கல்விச் சான்றிதழ் நகல் கோரி 25 ஆயிரத்து 189 பேர் விண்ணப்பித்திருப்பதாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்க ளில் மழை வெள்ளத்தில் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர் களுக்கு நகல் சான்றிதழ் வழங்கும் வகையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் 132 பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
கடந்த 14-ம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு முகாம் திங்கள்கிழமை யுடன் முடிவடைந்தது. 10-ம் வகுப்பு சான்றிதழ் கேட்டு 12,350 பேர், பிளஸ்-2 சான்று கோரி 7,444 பேர், மாற்றுச்சான்றிதழ் (டிசி) கேட்டு 5,395 பேர் என மொத்தம் 25 ஆயிரத்து 189 பேர் விண்ணப்பித் திருப்பதாக பள்ளிக்கல்வி இயக்கு நர் கண்ணப்பன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment