Pages

Wednesday, December 23, 2015

பள்ளிகளில் துப்புரவு பணி ஊழியர்கள் நியமிக்க உத்தரவு


ராமநாதபுரம்,:அரசு பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய ரூ.750 முதல் ரூ.2 ஆயிரம் ஊதியத்தில் தற்காலிக துப்புரவு பணியாளர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லாத தால் மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்வதாக புகார் எழுகிறது. இதை தடுக்கும் விதமாக ஊராட்சி ஒன்றிய, அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்களை நியமிக்க ஊரகவளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஊராட்சி அமைப்புகள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி தலைமைஆசிரியர்கள் கண்காணிப்பில் துப்புரவு பணியாளர்கள் செயல்படுவர். ஊராட்சி நிதியில் இருந்து சம்பளம் வழங்கப்படும்.ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசு தொடக்கப்பள்ளி துப்புரவு பணியாளருக்கு ரூ.750 மற்றும் துடைப்பம், பிளீச்சிங் பவுடர், இதர செலவுகளுக்கு ரூ.300 வழங்கப்படும்.
நடுநிலைப்பள்ளி துப்புரவு பணியாளருக்கு ரூ. ௧,௦௦௦, இதர செலவுக்கு ரூ.500 வழங்கப்படும். உயர்நிலைப்பள்ளி துப்புரவு பணியாளருக்கு ரூ.1,500, இதர செலவுக்கு ரூ.750, மேல்
நிலைப்பள்ளி துப்புரவு பணியாளருக்கு ரூ.2,௦௦௦, இதர செலவுக்கு ரூ.௧,௦௦௦ வழங்கப்படும்.

No comments:

Post a Comment