சென்னை: 'ராகிங்' குற்றச்சாட்டில், சென்னை, இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரியில், 12 மாணவர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, கே.கே.நகரில் உள்ள, இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரியில், புதிதாக சேர்ந்த, முதலாம் ஆண்டு மாணவர்களை, மூத்த மாணவர்கள், ராகிங் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை தொடர்ந்து, இரண்டாம் ஆண்டு மாணவர்கள், 12 பேரை நிர்வாகம், 'சஸ்பெண்ட்' செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து கல்லுாரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது, 'மாணவர்களுக்குள் சிறு பிரச்னை இருந்தது; சரி செய்து விட்டோம். கல்லுாரிக்குள் நடந்த சிறு விஷயத்தை பெரிதாக்க வேண்டாம்' என்றனர்
No comments:
Post a Comment