Pages

Tuesday, December 22, 2015

பிளஸ் 2 துணைத் தேர்வர்கள் கவனத்துக்கு


திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்டோபர் மாதம் பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதிய தேர்வர்கள் புதன்கிழமை (டிசம்பர் 23) முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார் தெரிவித்துள்ளார்.



தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பிளஸ் 2 துணைத் தேர்வுகள் நடைபெற்றன. திருவண்ணாமலை மாவட்டத்திலும் இந்தத் தேர்வை ஏராளமானோர் எழுதினர்.

தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் புதன்கிழமை (டிசம்பர் 23) காலை 11 மணி முதல் வழங்கப்படுகிறது.

தனித் தேர்வர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே டிசம்பர் 23 காலை 11 முதல் ஜனவரி 8-ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம்.

ஜனவரி 8-ம் தேதிக்குப் பிறகு அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment