சிறுபான்மை சமுதாயத்தில் இருந்து 2014-15 நிதியாண்டில் மத்திய அரசுத் துறைகளுக்கு சுமார் 9 சதவீத பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு சிறுபான்மை விவகாரங்கள் துறை இணை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அப்போது 65 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தொடர்பான தகவல்களை பகிர்ந்து அவர் கூறியதாவது:-
2014-15ம் ஆண்டில் சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சேர்ந்த 11218 நபர்கள் மத்திய அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது 8.79 சதவீதம் ஆகும்.
2013-14ம் ஆண்டில் மத்திய அரசுத் துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் 128964 நபர்களும் (7.89 சதவீதம்), 2012-13ம் ஆண்டில் ஒட்டுமொத்த ஆட்சேர்ப்பில் 22,839 சிறுபான்மையினரும் (6.91 சதவீதமும்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment