வெள்ளத்தினால் இழந்த சான்றிதழ்கள்-ஆவணங்களை எங்கு பெறலாம்? என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை கலெக்டர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிறப்பு முகாம்கள்
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி, வெள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் இழந்துள்ள நிலம் மற்றும் வீட்டுமனைப் பட்டா, கல்வி சான்றிதழ், ‘கியாஸ்’ இணைப்பு புத்தகம், ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், நிலம்-வீட்டு கிரைய பத்திரம், ஆட்டோ ஓட்டுனர்கள் இழந்துள்ள லைசென்ஸ் மற்றும் வாகன பதிவுச்சான்று உள்ளிட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை திரும்ப வழங்கும் வகையில் சென்னை மாவட்டத்திலுள்ள 10 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருகிற 14-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. முகாம்களின் விவரம் வருமாறு:-
* 473, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, (அப்போலோ மருத்துவமனை அருகில்), தண்டையார்பேட்டை.
* 3, ராஜா முத்தையா சாலை, பெரியமேடு (நேரு ஸ்டேடியம் அருகில்), புரசைவாக்கம்.
* 3, பெரம்பூர் நெடுஞ்சாலை, பெரம்பூர் ரெயில்வே ஸ்டேஷன் அருகில், பெரம்பூர்.
* 25, யுனைடெட் இந்தியா காலனி, முதல் மெயின்ரோடு, அயனாவரம்.
* 88, மேயர் ராமநாதன் சாலை, சேத்துபட்டு.
* 4, மேற்கு மாடவீதி, கோயம்பேடு, (குறுங்காலீசுவரர் கோவில் அருகில்).
* புதிய எண் 1/பழைய எண் 2, பாரதிதாசன் காலனி, கே.கே.நகர்.
* 370, அண்ணாசாலை, சைதாப்பேட்டை.
* 28, பசும்பொன் முத்துராமலிங்கம் சாலை, ராஜா அண்ணமாலைபுரம்.
* ஐ.ஆர்.டி. வளாகம், 100 அடி சாலை, தரமணி.
நகல் ஆவணங்கள் பெறலாம்
இந்த முகாம்களில் தமிழக அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் மத்திய அரசின் தொடர்புடைய நிறுவனங்களின் அலுவலர்கள் கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று ஒரு வார காலத்திற்குள் நகல் ஆவணங்களை கட்டணமின்றி வழங்க உள்ளனர்.
பொதுமக்கள் இந்த சிறப்பு முகாம்களில் பங்கேற்று, வெள்ளத்தில் இழந்த சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களின் நகல் ஆவணங்களை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment