வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், ஐ.டி.ஐ., மாணவர்கள், கல்வி சான்றிதழ்களை இழந்திருந்தால் சிறப்பு முகாமில் நகல் பெற்றுக் கொள்ளலாம்.
முதல்வர் உத்தரவின்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர், எந்த மாவட்டத்தில் உள்ள ஐ.டி.ஐ.,யில் படித்து தேர்ச்சி பெற்றிருந்தாலும், வெள்ளத்தில் கல்வி சான்றிதழ்களை இழந்திருந்தால், அவற்றின் நகல்
சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். நான்கு மாவட்டங்களில் உள்ள, அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ., நிறுவனங்களில் நடைபெறும், சிறப்பு முகாமிற்கு சென்று, கட்டணமின்றி சான்றிதழ்களை பெறலாம். சிறப்பு முகாம், 14ம் தேதி முதல், இரு வாரங்களுக்கு நடைபெறும்.
No comments:
Post a Comment