Pages

Friday, December 11, 2015

டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு


நகர மற்றும் ஊரகமைப்புத் துறையில், ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு, நவ., 13ம் தேதி, 'ஆன் - லைன்' தேர்வாக நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. மழையால் தள்ளி வைக்கப்பட்ட, அந்த தேர்வு, வரும், 27ம் தேதி நடக்கிறது.

இதேபோல், உதவிப் பொறியாளர் - சிவில் மற்றும் உதவி மருத்துவ அலுவலர் பதவிக்கான எழுத்து தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன.தேர்ச்சி பெற்றவர்களுக்கு, உதவி பொறியாளர் பணிக்கு, டிச., 28 முதல், 30 வரை சான்றிதழ் சரிபார்ப்பு; 2016 ஜன., 11 முதல், 14ம் தேதி வரை, நேர்முக தேர்வு நடைபெறும். உதவி மருத்துவ அலுவலருக்கு, டிச., 29 முதல், 31 வரை சான்றிதழ் சரிபார்ப்பு; ஜன., 20 முதல், 22ம் தேதி வரை, நேர்காணல் நடக்கும் என, அரசு பணியாளர் தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment