கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பினால் தமிழகத்தில் சட்டப் பேரவை தேர்தலும், மாணவர் களுக்கான பொதுத்தேர்வும் தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்ட பள்ளி, கல்லூரி களுக்கு 30 நாட்களுக்குமேல் விடுமுறை விடப்பட்டுள்ளது. பருவ மழைக்காலம் டிசம்பர் இறுதி வரை இருப்பதால் இன்னும் விடுமுறை விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஓராண்டில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் 220 நாட்களும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் 200 நாட்களும் கண்டிப்பாக இயங்க வேண்டும். எதிர்பாராதவகையில் விடுமுறை விடப்பட்டால், அது சனிக்கிழமைகளில் ஈடுகட்டப்படும்.
கனமழை காரணமாக கடந்த 7-ந் தேதி தொடங்கவிருந்த அரை யாண்டுத் தேர்வுகள் ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஜனவரி யில் அரையாண்டுத் தேர்வுகளை நடத்தினால், பொதுத்தேர்வுக்கு 2 மாதமே இடைவெளி இருக்கும். எனவே, அரையாண்டுத் தேர்வுக் குப் பதில் நேரடியாக இறுதித் தேர்வை நடத்தலாம் என்ற கருத்தும் பரவலாக எழுந்துள்ளது. இந்த யோசனையை ஆசிரியர்கள் வரவேற்றாலும் 10 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற விமர்சனமும் உள்ளது.
இதுகுறித்து அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் வே.மணிவாசகன் கூறும்போது, ‘‘மழை விடுமுறையால் பள்ளி வேலை நாட்கள் குறைவாகத்தான் உள்ளன. எனவே, அரையாண்டுத் தேர்வை ரத்துசெய்துவிட்டு நேரடி யாக ஆண்டு இறுதித்தேர்வை நடத்திவிடலாம்’’ என்றார்.
கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜ கோபாலன் கூறும்போது, ‘‘அனைத்து மாவட்டங்களிலும் அரையாண்டுத் தேர்வை ரத்து செய்ய வேண்டியதில்லை. மழை யால் பாதிக்கப்பட்ட மாவட்டங் களில் வேண்டுமானால் ரத்து செய்ய லாம்’’ என்றார். நேரடியாக இறுதித் தேர்வை நடத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று கூறும் ஓய்வு பெற்ற தொடக்கக்கல்வி துணை இயக்குநர் சிவா.தமிழ்மணி, ‘‘அரை யாண்டுத் தேர்வை தள்ளிவைப் பதுதான் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நல்லது’’ என தெரிவித்தார்.
பொதுத் தேர்வு நடத்துவது ஒருபுறம் இருக்கட்டும். அதேநேரத் தில் அடுத்த ஆண்டு சட்டப் பேர வைக்கான பொதுத்தேர்தலும் நடத்த வேண்டியுள்ளது. 2016 மே மாதத்துக்குள் பொதுத்தேர்தலை நடத்தியாக வேண்டும். அதற்கு முன்பு தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
வாக்குச்சாவடி பணியாளர் களை நியமித்தல், அவர்களுக்கு பயிற்சி அளித்தல், பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிதல், பூத் சிலிப் வழங்குதல் என தேர்தல் ஆணையத்துக்கு அடுத் தடுத்து பல்வேறு பணிகள் காத் திருக்கின்றன. தேர்தல் துறை யினருடன் வருவாய்த்துறை யினரும் ஆசிரியர்களும் இந்தப் பணியில் அதிகளவில் ஈடுபடுவர். தமிழகத்தில் தற்போது வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணிகள் நடந்து வருகிறது. மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் பணிகள் தொய்வடைந் துள்ளன. இதையடுத்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு, ஜனவரி 5-க்கு பதில் 20-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வருவாய்த்துறையினர் தற் போது வெள்ள சேதத்தை மதிப் பிடுதல், சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் முடிந்து, தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தேர்தல் வழக்கமாக மே மாதம் நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்படும். அதன்பின், பல்வேறு ஆயத்தப்பணி கள் உள்ளன. இப்பணிகளில் ஆசிரியர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் என 2.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்படுவர். தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ளன. அடுத்த மாதத்துக்குள் வெள்ள நிவாரணப் பணிகளை முடித்தால்கூட, தேர்தல் பணிகளை தொடங்கிவிடலாம். அதேநேரத்தில் குறிப்பிட்ட காலத்துக்குள் புதிய அரசு அமைய வேண்டும். அதற் கான காலகட்டத்துக்குள் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முயற்சிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தலுக்கும் மாணவர்களின் பொதுத்தேர்வுக்கும் குறிப்பிட்ட கால இடைவெளி வேண்டும் என்ற கருத்தும் பலரால் முன்வைக்கப்படு கிறது. வெள்ள பாதிப்பு காரணமாக பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ள சூழலில், ஆண்டு பொதுத்தேர்வும் தள்ளிப் போகுமோ என்ற கேள்வி எழுந்துள் ளது. அதேபோல தேர்தலுக்கான அட்டவணையை மாற்றியமைக்க வேண்டிய நிலைக்கு தேர்தல் ஆணையம் தள்ளப்பட்டுள்ளது.
2015 அரசு பொதுத்தேர்வு
இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 5-ல் தொடங்கி 31-ம் தேதி வரை சுமார் ஒரு மாதம் நடந்தது. எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 19-ல் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
2011 சட்டப்பேரவை தேர்தலில்..
கடந்த 2011-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 1-ம் தேதி தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. அன்று முதலே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. மார்ச் 19-ம் தேதி பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டு, ஏப்ரல் 13-ம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. மே 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மே 14-ம் தேதி புதிய சட்டப்பேரவை அமைக்கப்பட்டது. புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் மே 23-ம் தேதி நடந்தது. கடந்த பொதுத்தேர்தலின்போது வாக்குப்பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே ஒரு மாதம் இடைவெளி விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்கும் மாணவர்களின் பொதுத்தேர்வுக்கும் குறிப்பிட்ட கால இடைவெளி கட்டாயம் வேண்டும் என்ற கருத்தும் பலரால் முன்வைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment