கல்லூரிகளில் 75 சதவீதத்திற்கு மேல் வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க., அரசு தனது தேர்தல் அறிக்கையில் நன்கு படிக்கும், முறையாக கல்லூரிக்கும் வரும் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. அதற்கு கடந்த ஆண்டு (2014) செப்டம்பர் மாதம் இது தொடர்பான திட்டத்திற்கு மத்திய பிரதேச அரசு ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், ஒப்புதல் அளித்து ஓராண்டு ஆகியும் இன்னும் ஏன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று அம்மாநில சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் நேற்று கேள்வி எழுப்பியது.
இதற்கு பதிலளித்து பேசிய அம்மாநில கல்வித் துறை மந்திரி தீபக் ஜோஷி, ‘தொழில்நுட்ப கோளாறு காரணமாக வருகைப் பதிவேடு கணக்கிடும் பணி தாமதமாகி வருவதாகவும், விரைவில் ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும் என்றும் கூறினார்.
மேலும் 2015-16 ஆண்டிற்கான செமஸ்டர்கள் தற்போது நடைபெற்று வருவதால், வருகைப் பதிவு கணக்கிட முடியாது என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment