வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், பயணிகள் பாதுகாப்பை கருதி கடந்த மாதத்தில் 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்தநிலையில் 2 நாட்களாக பெய்யும் கன மழையினால் நேற்று 41 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
20-க்கும் மேற்பட்ட ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்பட்ட ரெயில்களில் பயணம் செய்ய இருந்த பயணிகள் செலுத்திய டிக்கெட் கட்டணம் மீண்டும் திரும்ப ஒப்படைக்கப்பட உள்ளது. அதன்படி ‘ஆன்-லைன்’ மூலம் டிக்கெட் எடுத்தவர்களுக்கு அவர்கள் செலுத்திய கட்டணம் மீண்டும் அதே வங்கிக்கணக்கில் 3 நாட்களுக்குள் செலுத்தப்படும்.
ரெயில் நிலையங்களில் டிக்கெட் எடுத்திருந்தால் அங்கேயே 3 நாட்களுக்கு பிறகு டிக்கெட் கட்டணம் திரும்ப ஒப்படைக்கப்படும். இந்த தகவலை தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment