வெள்ள நிவாரணப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு உதவிடும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் வரும் டிசம்பர் 11-ஆம் தேதி வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ளப் பாதிப்பை கருத்தில் கொண்டு டிசம்பர் 11ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்திவைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள நிவாரணம், மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment